2025ம் ஆண்டில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் உலகம் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
மிகவும் அதிர்ச்சிகரமான இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் – செயற்கை நுண்ணறிவு, அதாவது AI.
முன்பு தொழில்நுட்ப துறையை, பாதுகாப்பான, வளர்ச்சியுள்ள துறையாகக் கருதினோம். ஆனால் இப்போது, அதே துறைதான், பலர் வேலை இழக்கும் இடமாக மாறியுள்ளது.
மென்பொருள் பொறியாளர்கள், HR நிபுணர்கள், கிரியேட்டிவ் டிசைனர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள், தங்கள் இடத்தை AI மெஷின் களிடம் இழந்து வருகின்றனர்.
Futurism என்னும் ஊடகத்தின் அறிக்கையின்படி, தானியங்கி அல்கோரிதம்கள், இயந்திரக் கற்றல் முறைகள் மூலம், மிகக் குறைந்த செலவில் வேலைகளை முடிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பெரிதாகவே பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
ஐபிஎம் நிறுவனத்தில் மட்டும், கடந்த சில மாதங்களில் 8,000 ஊழியர்கள் பணி இழந்துள்ளனர்.
பயன்பாட்டை மிகையாக மாற்றிய HR துறையில் ஆரம்பத்தில் 200 பேர் நீக்கம், பின்னர் பல நூறு பேர், AI உருவாக்கிய மென்பொருட்கள் அவர்களது வேலையை எடுத்துக்கொண்டதால், பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கோடிங், டெஸ்டிங், ஆவண மேலாண்மை, சம்பள கணக்கீடு – இவை அனைத்தும் தற்போது AI மென்பொருளால் தானாகவே நடைபெறுகிறது.
இதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனமும் சமீபத்தில் 6,000 ஊழியர்களை நீக்கியது.
வாஷிங்டனில் மட்டும் 40% வரை பணிநீக்கங்கள் நடந்துள்ளன.
பரிதாபமாக, அந்த AI அமைப்புகளை உருவாக்கியவர்களே, பணி இழப்புக்குள்ளாகியுள்ளனர்.
AI-யின் வருகை இன்னும் ஆரம்பமே.
பணி இழப்புகள் நாளை மேலும் அதிகரிக்கலாம் என்பதுதான் நிபுணர்கள் கணிப்பு.
இந்த சூழ்நிலைக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது ஒன்றே –
திறமைகளை புதுப்பித்துக்கொண்டு, மனிதர்களாக மட்டுமே செய்யக்கூடிய பணிகளில் தேர்ச்சி பெறுவது.
வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரையில் எங்கு போனாலும், உங்கள் திறமை மட்டும் உங்கள் பக்கத்தில் இருந்தால், எதிர்காலம் நிச்சயமாக உங்களுக்கே.