Tuesday, July 1, 2025

பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news