இந்தியாவில் ரெயில் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் ரெயில்களுக்கு மட்டுமே பொருந்தும். புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.
புதிய கட்டண விவரம்:
- 501 முதல் 1,500 கிமீ வரை: ரூ.5 உயர்வு
- 1,501 முதல் 2,500 கிமீ வரை: ரூ.10 உயர்வு
- 2,501 முதல் 3,000 கிமீ வரை: ரூ.15 உயர்வு
- படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளுக்கு: கிமீக்கு ½ பைசா உயர்வு
- ஏ.சி. பெட்டிகளுக்கு: கிமீக்கு 2 பைசா உயர்வு
முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளுக்கு 500 கிமீ வரை கட்டண உயர்வு இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். புதிய கட்டணங்கள் அனைத்து உயர் வகுப்பு ரெயில்களுக்கும் (ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத், டொரண்டோ, அந்தியோதயா) பொருந்தும்.
டிக்கெட் முன்பதிவு மையங்கள், செயலிகள், கவுண்டர்கள் புதிய கட்டணத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.