கொஞ்சமாச்சும் ‘திருந்துங்க’ RCBயை ‘வெளுக்கும்’ ரசிகர்கள்

IPL தொடரின் நடப்பு சாம்பியனாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது. கோப்பை வென்ற கையோடு நடந்த வெற்றிவிழாவில், 11 ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தால் 18 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றும், அந்த மகிழ்ச்சியை பெங்களூரு அணியால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

இந்தநிலையில் RCB அணியின் சமீபத்திய செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் Cool கேப்டன் என புகழப்படும், மகேந்திர சிங் தோனி அண்மையில் ICC Hall Of Fame லிஸ்டில் இடம்பெற்றார். அப்போது மற்ற IPL அணிகள் அனைத்தும் தோனி குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரை பாராட்டியது.

ஆனால் பெங்களூரு அணி தோனி குறித்து எதுவும் பதிவிடவில்லை. இத்தனைக்கும் RCBயின் சொத்தாக பார்க்கப்படும் விராட் கோலியை கேப்டனாக அறிவித்து, அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றவர் தோனி. ஆனால் தோனி விஷயத்தில் RCB கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. இதேபோல சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதும், பெங்களூரு அதுகுறித்து வாயே திறக்கவில்லை.

தற்போது மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. T20 உலகக்கோப்பையை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி இந்தியா வென்றது. கோப்பை வென்ற கையோடு ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் T20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஒரே நேரத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்தனர். T20 கோப்பையை இந்தியா வென்று ஓராண்டு ஆனதையொட்டி ICC, BCCI தொடங்கி IPL அணிகள் அனைத்தும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து, சமூக வலைதளங்களில் பாராட்டி போஸ்ட் வெளியிட்டன.

பெங்களூரு அணி மட்டும் எந்தவொரு வாழ்த்து செய்தியையும் பகிரவில்லை. உலகக்கோப்பையை இந்தியா வெல்ல உறுதுணையாக இருந்த King கோலி அணியில் இருந்தும்கூட, அந்த அணி வாழ்த்து தெரிவிக்காமல் கள்ள மவுனம் காத்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” அடுத்த IPLக்கு தான் தூக்கத்துல இருந்து முழிப்பீங்களா Admin?, கோலிக்கு கூட மரியாதை குடுக்க மாட்றீங்க?,” இவ்வாறு விதவிதமாக பெங்களூரு அணியை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *