சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதாவது ஜூன் 28ம் தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.680 என குறைந்திருந்த நிலையில் இன்று மேலும் சற்று சரிந்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான ஏற்றத்தாழ்வும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருக்கிறது. கடந்த 14ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,560 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து, கிராம் ஒன்று 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 71,880 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் வரை விலை குறைந்து இருக்கிறது, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் வரை சரிந்திருக்கிறது. இந்த ஆறு நாட்களில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது என்பதால் தங்கம் விலை தொடர்ந்து சரியுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் தணிந்துள்ள காரணத்தால் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று கணிக்கப்படுகிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க