ஜூலை 1 முதல் அதிரடி மாற்றங்கள்! LPG சிலிண்டர் முதல் ஆதார் வரை! நோட் பண்ணிக்கோங்க மக்களே!

இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு மாத ஆரம்பத்தை போலவே ஜூலை 2025-இலும் பல முக்கிய மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி ஜூலை 1 முதலான புதிய விதிகளில் PAN தொடர்பான மாற்றங்களும் உள்ளன. அதாவது இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் Card கட்டாயமாக்கப்படும். அடுத்ததாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் விதிமுறை படி, இனி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு OTP அங்கீகாரம் அவசியம். அடுத்து HDFC கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் வரவிருக்கின்றன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் கேமிங் செயலிகளில் ரூ.10,000 வரை செலவிட்டால், அதற்கு தனியாக 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்ததாக இனி ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வேறு எந்த வங்கியின் ATM-மிலிருந்தும் ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பணப் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்தது ஜூலை மாதத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகின்றது.

மட்டுமல்லாமல் ஜூன் மாதமே EPFO அதன் புதிய பதிப்பான EPFO 3.0 ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை இது தள்ளிப்போனால் கண்டிப்பாக ஜூலை மாதம் அமலுக்கு வரும். இதன் மூலம், பணம் எடுப்பது, விவரங்களைக் கோருவது, Claim-கள் அல்லது புதுப்பித்தல் போன்ற PF தொடர்பான சேவைகள் முன்பை விட மிக சுலபமாகிவிடும்.

Related News

Latest News