இஸ்ரேல் – ஈரான் போர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்புப் படைக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கான இயந்திரங்களை சீனா, ஹாங்காங், துருக்கி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் வழங்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அமெரிக்க பொருளாதாரத் துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், Rayan Roshd Afzar Company அதாவது RRA மற்றும் டோவ்ஸ் சனாயே நிம் ரிசனாயே டராஷி ஆகிய இரு நிறுவனங்களுக்காக கப்பல்களில் அனுப்பப்பட்ட உயர் தொழிநுட்ப கருவிகளை மறைக்க பல முன்னணி நிறுவனங்கள் தவறான கப்பல் ஆவணங்களைப் பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் V-Shipping Ltd மற்றும் சீனாவின் ஷென்ஸென் ஸின்ஸின் Shipping Co Ltd ஆகியன இந்தச் சரக்குகளை சீரமைத்ததுடன், இறுதி வாடிக்கையாளர்களை மறைக்கும் நோக்கில் ஆவணங்களைத் திருத்தியுள்ளன.
அத்தோடு, துருக்கி நிறுவனமான எல்டிஸா டிஸ் டிகாரெட் Ltd, கடைசியாக யார் அதனை பெறுகிறார்கள் என்பதை மறைக்க முயற்சி செய்ததாகவும் சீன நாட்டு கப்பல் பற்றிய போலியான தகவல்கள சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.