Thursday, June 19, 2025

கமேனிக்கு பிறகு? இனி ஈரானை ஆட்டப்போகும் மர்ம சக்திகள் யார்?

அதிகரித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் மோதலின் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கூற்றில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு இருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அமெரிக்கா மீது எதிராக நடந்து கொண்டால் கடுமையான முடிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கமேனி எந்தவிதத்திலும் அடங்கவில்லை. மாறாக, அமெரிக்கா தலையிட்டால் எதிர்வினை இன்னும் கடுமையாக இருக்கும் என்று பதிலடி கொடுத்தார்.

இந்தச் சூழலில், மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது – கமேனி ஆட்சி வீழ்ந்தால், அடுத்த ஈரான் தலைவர் யார்? இந்த பதவிக்கான போட்டி, பொதுவில் நடக்கும் தேர்தலாக இல்லாது, மூடப்பட்டது போலவும், ஆனால் மிகவும் தீவிரமாகவும் நடக்கிறது.

முதலில் பேசப்படுவது மொஜ்தபா கமேனி(Mojtaba Khamenei) – கமேனியின் இரண்டாவது மகன். அவர் IRGC உடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார். பாதுகாப்பு அமைப்புகள், மதபடையில் வலுப்பெற்ற சுத்த மதவாதத் தளத்தில் வளர்ந்தவர். அவரைப் பின்பற்றி இருக்கிறவர், அலிரேசா அரஃபி. அவர் நிபுணர்கள் சபையின் முக்கிய உறுப்பினர், அதேசமயம் கோம் நகரில் மதக் கல்லூரி தலைவராகவும் உள்ளார். அவரின் பழமைவாத கொள்கைகள், மதநிலை மற்றும் அரசியலில் நிலையான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்தவராக, ஹாஷேம் ஹொசைனி புஷேஹ்ரி (Hashem Hosseini Bushehri) – இவர் நிபுணர்கள் சபையின் துணைத்தலைவர் அவார். கோம் செமினரி அமைப்பை வழிநடத்துகிறார். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நாயகமாகவும் பணியாற்றுகிறார். இவரை நேரடியாக அயதுல்லா கமேனியே நியமித்தவர் என்பது முக்கியம்.

இவற்றின் பின்னால் செயல்படும் நிஜ சக்திகள் யார்? அலி அஸ்கர் ஹிஜாஸ் , வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விசயங்களில் கமேனியின் நிழல். முக்கிய முடிவுகள் உருவாகும் இடத்தில் அவர் இருப்பதை அறிகிறோம். கோலம் ஹொசைன் மொஹ்சேனியும், நீண்ட நீதித்துறை அனுபவம் உடையவர். அவர் முன்னர் உளவுத்துறை அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தவர்.

மற்ற முக்கியமான பெயர் என்னவனென்றால் முகமது கோல்பாயேகானி – கமேனியுடன் நீண்ட கால அனுபவம் கொண்டவர். முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் அலி அக்பர் வேலாயதி மற்றும் கமல் கராசி, மேலும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானியும் இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கமேனி ஆட்சி முடிவுக்கு வந்தால், இது வெறும் தலைமை மாற்றமா? இல்லையெனில், ஈரான் முழுவதும் ஒரு புதிய அதிகாரச் சூழல் உருவாகுமா? என்பதை வருகிற நாட்கள் தீர்மானிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news