Tuesday, August 12, 2025
HTML tutorial

ரூ. 22 லட்சத்தை இழந்த பெண் : பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக கூறி சைபர் மோசடி

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 64 வயது பெண் ஒருவருக்கு கடந்த 5ம் தேதி செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் டெல்லியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் வேலை செய்வதாக கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடம் நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக கூறியுள்ளார். வழக்கில் 10 ஆண்டுகள் சிறையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க அந்த பெண் 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அதன் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த அந்த பெண் மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News