நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வரும் நிலையில், பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறேன். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதும் தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கேட்டதற்கு அது ஒரு துயரமான சம்பவம் என்று தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்கு உள்ளே புறப்பட்டு சென்றார்.