Wednesday, July 30, 2025

மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாம்: பிரதமர் மோடி பெயரில் போலி வீடியோ வைரல்

ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என பிரதமர் மோடி பேசுவது போல வீடியோ இன்று வைரலாக பரவி வருகிறது. ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் “பிரதமர் நரேந்திர மோடி ரூ.21 ஆயிரம் முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்க மக்களை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட போலியான வீடியோ. இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாற வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News