Thursday, July 31, 2025

அரசு பள்ளி நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகர் கார்த்தி

கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவில், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சிவக்குமார் தனது மகன் கார்த்தியுடன் கலந்து கொண்டார்.

இதில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, அரசு பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக உள்ளது என்றும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உயர்தர கல்வி வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

மேலும் தனது அத்தை இளமை காலத்தில் பள்ளிக்கு செல்லவும், கல்விக் கட்டணம் செலுத்தவும் முடியாமல் சிரமப்பட்ட சூழலை நினைவுகூர்ந்து மேடையில் கண் கலங்கினார். இதையடுத்து பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News