Thursday, July 31, 2025

விபத்தில் பலியான விமான பணிப்பெண்.., தொடர்ந்து போன் செய்யும் குடும்பத்தினர்

அகமதாபாத் விமான விபத்தில் மணிப்பூரை சேர்ந்த விமான பணிப்பெண் உயிரிழந்த நிலையில், அவரது செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயன்று வருவது இதயத்தை நொறுக்கியுள்ளது.

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான விமான பணிப்பெண் நந்தோய் சர்மா என்பவர், அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் பயணித்தார். இந்த நிலையில், விபத்தில் சிக்கிய விமானத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்த நிலையில், தன்னுடைய மகள் உயிருடன் தான் இருப்பார் என குடும்பத்தினர் நம்பிக்கையுடன் கூறினர்.

அவரது செல்போனுக்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயன்று வருவது அனைவரையும் கனக்க செய்துள்ளது. 2 நாட்களில் வருவதாக சொல்லிவிட்டு சென்றவர், வராமலேயே போய்விட்டதாக கூறி பணிப்பெண்ணின் சகோதரி கதறியது, கண்களின் கண்ணீரை வரவைத்துள்ளது.

இந்த விபத்தில் மணிப்பூரை சேர்ந்த மற்றொரு பணிப்பெண்ணும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News