Thursday, January 15, 2026

Dhoni மேல ‘அப்படி’ என்ன வன்மம்? RCBஐ கழுவி ‘ஊற்றும்’ ரசிகர்கள்!

கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த, கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில், ‘Hall Of Fame’ அங்கீகாரத்தை ICC வழங்கி வருகிறது. அதன்படி இந்த 2025ம் ஆண்டுக்கான ICC Hall Of Fame பட்டியலில், இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ICC வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற, ஒரே கேப்டன் தோனி மட்டுமே. அவரின் சாதனைகளை போற்றும் வகையில் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிரிக்கெட் ஜாம்பவான்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தோனி தற்போது IPL தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இதனால் IPL அணிகளும் சமூக வலைதளங்களின் வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றன. அந்தவகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, லக்னோ, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஹைதராபாத் என 9 அணிகள் தோனியை வாழ்த்தியுள்ளன.

ஆனால் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும், தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் கோலி – தோனி இடையே நல்ல நட்பு நிலவி வருகிறது. கேப்டனாக அறிவித்தது தொடங்கி பல்வேறு விஷயங்களிலும் தோனி, கோலியின் குருவாகத் திகழ்கிறார். ஆனாலும் அந்த அணி தோனிக்கு வாழ்த்து கூறவில்லை.

இதைப்பார்த்த CSK ரசிகர்கள், ” தோனி மேல உள்ள மொத்த வன்மத்தையும் கக்கிட்டீங்க போல” என்று RCBஐ வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் சற்றே ஓய்ந்து கிடந்த சென்னை – பெங்களூரு ரசிகர்களின் சண்டை, மீண்டும் சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளது.

Related News

Latest News