Friday, August 15, 2025
HTML tutorial

சிக்கன் குழம்பில் வேண்டுமென்றே ரப்பர் பல்லியை போட்டு வீடியோ எடுத்தவர் மீது வழக்குப்பதிவு

கோவை ஆர்எஸ் புரத்தில் கோவை பிரியாணி என்ற உணவகத்தில் சிக்கன் குழம்பில் வேண்டுமென்றே லப்பர் பல்லியை போட்டு வதந்தி பரப்பிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 27ம் தேதி கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள கோவை பிரியாணி கடைக்கு சாப்பிட வந்த சிலர் சிக்கன் குழம்பில் பல்லி இருப்பதாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவை பிரியாணி கடை உரிமையாளர், தங்கள் உணவகத்தில் திட்டமிட்டே பல்லியை உணவில் கலந்துள்ளதாகவும், அதற்கான சிசிடிவி ஆதாரத்தையும் அளித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அது உண்மையான பல்லி இல்லை என்பதும் ரப்பல் பல்லி என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த நடராஜன் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News