Wednesday, December 17, 2025

”அந்த இடத்துல தான் எல்லாமே” கலங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த, அந்தவொரு ஆனந்தத் திருநாளும் RCBக்கு வந்தே விட்டது. 18வது ஆண்டில் King கோலி தன்னுடைய பக்கெட் லிஸ்டில் மிச்சமிருந்த, IPL கோப்பையையும் கையில் ஏந்தி உச்சி முகர்ந்து விட்டார். கிரிக்கெட் உலகில் எத்தனையோ சாத்னைகளை உடைத்தெறிந்த கோலிக்கு, IPL கோப்பை ஆகப்பெரும் கனவாகவே இருந்தது.

கடைசியில் அதையும் வென்று சாதித்து விட்டார். முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 190 ரன்களை மட்டுமே எடுத்தது. Qualifier 2 போட்டியில் மும்பைக்கு எதிராக, 228 ரன்களை பஞ்சாப் Chasing செய்திருந்ததால், இறுதிப்போட்டியில் அந்த அணி தான் கோப்பை வெல்லும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் பஞ்சாப்பின் கையில் இருந்த வெற்றியை, RCB பவுலர்கள் தட்டிப்பறித்து விட்டனர். முடிவில் 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வியைத் தழுவியது.

இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், தோல்வி குறித்து மனந்திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், ” எங்கள் அணியில் இளம்வீரர்கள் பயமறியாமல் ஆடினர். அவர்கள் இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.

உண்மையை சொன்னால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மும்பைக்கு எதிரான போட்டியை வென்றதால் 190 ரன்கள் என்பது எட்டிப் பிடிக்கக்கூடிய Score என்று தான், தனிப்பட்ட முறையில் நினைத்தேன். ஆனால் பெங்களூரு பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக Krunal Pandyaவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவரது பந்துவீச்சு தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

எங்களது அணியில் உள்ள ஒவ்வொருவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன். அடுத்த வருடம் நிச்சயம் IPL கோப்பையை வெல்வோம், ” என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Related News

Latest News