உலகம் அழியப்போகிறது? தமிழகத்தில் தென்பட்ட அறிகுறி! அறிவியல் பூர்வமாக கொடுக்கப்பட்ட அதிரடி விளக்கம்!

Doomsday மீன் என்று சொல்லப்படும் ஒருவகை மீன் உலக அழிவிற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது. தமிழக மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியிருப்பது ஆபத்துக்கான எச்சரிக்கையாக கூறப்படுவதோடு இதன் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மனித கற்பனைக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஒரு மர்மமான உயிரினம்தான் Doomsday Fish என்று சொல்லப்படும் ஓர் மீன். சில கலாச்சாரங்களில், குறிப்பாக ஜப்பானில் இது பெரும்பாலும் “டூம்ஸ்டே மீன்” அல்லது “பூகம்ப மீன்” என்று கூட அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மீன் கரை ஒதுக்கினால் அல்லது பிடிபட்டால் உலகில் பேரழிவுகள் நிகழலாம் என்று நம்பப்படுகிறது.

சுனாமி, நிலநடுக்கங்கள் அல்லது பூமியில் நடக்க போகும் அதிரடி மாற்றங்களின் அறிகுறியாகவும் உலகின் கடைசி நாட்களை உணர்த்தும் அடையாளங்களில் ஒன்றாகவும் பலரால் இந்த மீன் கருதப்படுகிறது. பெரிய பூகம்பங்கள் அல்லது சுனாமிகளுக்கு முன்பு இவ்வகை மீன்கள் ஆழமற்ற நீருக்கு வருவதாக ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக 2011 Tohoku நிலநடுக்கத்துக்கு முன்பு, ஜப்பானிய கடற்கரைகளில் Doomsday மீன்கள் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

ஓர் Fish போன்ற ஆழ்கடல் மீன்கள் நில அதிர்வு, காந்தப்புல மாற்றங்கள் அல்லது நீருக்கடியில் வாயு கசிவுகளை உணரக்கூடியவை. ஆகையால் இயற்கை மாற்றமே Doomsday மீன்கள் மேற்பரப்புக்கு வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இவ்வகை மீன்களைப் பார்ப்பதை பூகம்பங்களுடன் சம்மந்தப்படுத்தும் உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை என்பதே உண்மை.

Related News

Latest News