Saturday, August 16, 2025
HTML tutorial

பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து – 5 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 34 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து தரமட்டமாகியது. தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News