‘இந்தியா-பாகிஸ்தான் போர் மீண்டும் வெடிக்கும்’ ! டிரம்ப் போட்ட போடு!

அமெரிக்கா கடந்த சில வருடங்களாகவே உலக நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இதற்காக முக்கியமாக பயன்படுத்தப்படும் சட்டம் தான் International Emergency Economic Powers Act, சுருக்கமாக IEEPA. இந்த சட்டத்தை முன்னாள் அதிபர் டிரம்ப் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மிக அதிகமாக பயன்படுத்தினார். அந்த சட்டத்தின் கீழ், அவசர காலத்தில் தேசிய பாதுகாப்பிற்காக வரிகள் விதிக்க முடியுமாம். ஆனால் இதையே அவர் பல நாடுகள் மீது வரி விதிக்க உபயோகித்தார்.

இதனால் பாதிக்கப்படுவது அந்த நாடுகள் இல்ல… அமெரிக்கா மக்கள்தான். எடுத்துக்காட்டாக, கனடாவிலிருந்து அரிசி வாங்கும் ஒரு டீலர், இப்போது 25% கூடுதல் வரி கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இது அவருடைய செலவுகளை அதிகரிக்கும். அதனால், அவர் விற்கும் அரிசியின் விலையும் உயரும். இந்த உயர்ந்த விலையை அமெரிக்க மக்கள் தான் செலுத்தவேண்டும். இதுபோன்ற வரிகள் எந்த நாட்டுக்கு போட்டாலும், வரி செலுத்துவது அந்த நாட்டின் மக்கள் தான்.

இந்த நிலைமைக்கு எதிராக, அமெரிக்காவின் சிறு தொழில் வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். டிரம்ப் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார். இந்த சட்டத்தின் கீழ் அவர் செய்யக்கூடிய அதிகாரம் இல்லை. இது மாநில கவர்னர்களுக்கு சொந்தமானது என்று அவர்கள் வாதம் வைத்துள்ளனர்.

ஆனால் டிரம்ப் தரப்பு வாதம் வேற மாதிரி. “இந்த சட்டம் இருந்ததால்தான், அமெரிக்காவுக்கு மீண்டும் தொழிற்சாலைகள் வந்திருக்கிறது. நம்ம நாட்டின் பொருட்கள் மீதுள்ள வரிகள் குறைந்திருக்கிறது” என்று கூறுகிறார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதிலும் இந்த சட்டம் உதவியுள்ளது என்கிறார். “நான் வர்த்தகத்தை நெருக்கடி ஆக்கினேன். போர் நிறுத்தம் செய்ய இல்லையென்றால், நாங்கள் வரி விதிப்போம் என்றேன். அதனால் அவர்களே தாக்குதலை நிறுத்தினார்கள்” என்கிறார்.

இந்திய வெளியுறவுத் துறை இதனை நிராகரித்தபோதும், டிரம்ப் மீண்டும் சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் இதையே கூறியுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்த சட்டத்தின் அதிகாரத்தை டிரம்பிடம் இருந்து எடுத்துவிட்டால், இந்தியா-பாகிஸ்தான் போர் மீண்டும் வெடிக்கலாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

Related News

Latest News