Wednesday, December 17, 2025

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்..!!

சிங்கப்பூரின் வனவிலங்குச் சட்டத்தின்படி, வன உயிரினங்களுக்கு வனத்துறை தேசியப் பூங்காவின் உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் உணவளிப்பது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (70) என்ற மூதாட்டி கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் புறக்களுக்கு உணவளித்துள்ளார். 2024 நவம்பர் வரை அங்குள்ள புறாக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார்.

இதையடுத்து புறாக்களுக்கு உணவளித்ததற்காக அவர் மீது அந்நாட்டின் வனவிலங்குச் சட்டத்தின் படி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டு நீதிமன்றம் 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய பண மதிப்பீட்டில் ரூ. 79,373) அபராதமாக விதித்துள்ளது. மேலும், அவர் அபராதம் செலுத்தவில்லை என்றால் இரண்டு நாள்கள் சிறையில் கழிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Related News

Latest News