Saturday, August 16, 2025
HTML tutorial

பெண் குழந்தை இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் – ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேலும் ஞானசேகரன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஞானசேகரன் மீதான வழக்கில் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஞானசேகரனுக்கு பெண் குழந்தை இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News