Sunday, August 3, 2025
HTML tutorial

கேப்டனை ‘தூக்கியடித்த’ கோயங்கா? ரிஷப் பண்ட் செமத்தியான ‘பதிலடி’

ஹாட்ரிக் வெற்றியில் திளைத்த குஜராத் டைட்டன்ஸின் வெற்றியை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணை போட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளது. மே 22ம் தேதி பாயிண்ட் டேபிளில் பர்ஸ்ட் இடத்தை தக்க வைத்திருக்கும் குஜராத், Play Off வாய்ப்பை இழந்து வெளியேறிய லக்னோவுடன் மோதியது.

சொந்த மைதானம் என்பதால் தைரியமாக GT பவுலிங்கை தேர்வு செய்தது. ஆனால் குஜராத் பவுலர்களை லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் வெளுத்தெடுத்து விட்டார். தன்னுடைய முதல் IPL சதத்தை பதிவுசெய்த அவர், 117 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை அப்போதே உறுதி செய்து விட்டார்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ 236 ரன்களை குவித்தது. தொடர்ந்து Chasing செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களையே எடுத்தது. இதனால் லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இதற்கிடையே கேப்டன் ரிஷப் பண்டை, லக்னோ அணி வெளியேற்றவுள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் அடிபட்டு வருகின்றன.

இதுவரையில் இதை கண்டும் காணாமல் இருந்த ரிஷப் பண்ட், முதன்முறையாக தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ” பொய்யான செய்திகளை வெளியிடுவதால் அதிக பார்வைகளை பெற முடியும், என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சற்று சிந்தித்து உண்மையான செய்திகளை வெளியிடுங்கள்.

உள்நோக்கத்துடன் பொய்யான செய்திகளை வெளியிடாதீர்கள். சமூக வலைதளங்களில் பொறுப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளுங்கள்,” என்று காட்டமாக விளக்கமளித்து இருக்கிறார். இதன்வழியாக கோயங்கா, ரிஷப்பை அடுத்த ஆண்டு IPL தொடருக்கும், கேப்டனாக தக்க வைத்துக் கொள்வார் என்பது தெளிவாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News