அடடா!! ஆதார் கார்டுல போட்டோ Change பண்றது இவ்வளோ ஈசியா??

நம்மில் பலருக்கு நம்ப ஆதார் கார்டு-ல இருக்குற போட்டோவா பிடிக்கிறது இல்ல. மோசமான முகபாவனை, போதிய வெளிச்சமின்மை அல்லது பழைய போட்டோ இது போன்ற காரணங்களால் இருக்கலாம். இனிமேல் அது தோன்று சிக்கல் இல்லை.தற்போது அதிர்ஷ்டவசமாக, உங்கள் புகைப்படத்தை மாற்றுவது சாத்தியம்,

அதாவது ஆதார் அட்டை என்பது வங்கிகள், பாஸ்போர்ட், பள்ளி சேர்க்கை மற்றும் வேலை சரிபார்ப்பு போன்ற அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அரசாங்க ஆவணம்.. ஆதாரின் போட்டோவை அப்டேட் செய்வதை நினைப்பதை விட இது எளிதானது. நீங்கள் ஆதார் போட்டோவை முழுமையாக ஆன்லைனில் மாற்ற முடியாது என்றாலும், செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் அதிக நேரம் எடுக்காது.

UIDAI வலைத்தளத்துக்கு சென்று uidai.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் பதிவு அல்லது திருத்தப் படிவத்தைப் பதிவிறக்க வேண்டும்.. பின்னர், உங்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு , நிரப்பப்பட்ட படிவத்தின் அச்சுப்படியை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.பதிவு மையத்தின் அதிகாரி உங்கள் அடையாளத்தை பயோமெட்ரிக் மூலம் சரிபார்ப்பார். அதனோடு உடனடியாக ஒரு புதிய புகைப்படம் எடுக்கப்படும்.அப்டேட் செய்யப்பட்டவுடன் ₹100 மற்றும் GST செலுத்த வேண்டும்.

URN அதாவது புதுப்பித்தல் கோரிக்கை எண், உடன் ஒரு ஒப்புகை ஸ்லிப் உங்களுக்கு கொடுக்கப்படும்.உங்கள் புகைப்படப் புதுப்பிப்பு நிலையை UIDAI வலைத்தளத்தில் URN ஐப் பயன்படுத்தி கண்காணிக்கலாம். புதுப்பித்தல் 90 நாட்கள் வரை ஆகலாம், அதன் பிறகு உங்கள் புதுப்பிக்கப்பட்ட இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மறு அச்சுப் பெறலாம்.

Related News

Latest News