மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் தாரகை கத்பா்ட் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளார். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டியதற்காக தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தாரகை கத்பர்ட் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.