கேரளாவில் தீயணைப்பு வீரருக்கு பிரியாவிடை கொடுத்த பாசக்கார நாயின் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. கேரள தீயணைப்பு வீரரான ஷாஜு ஓய்வு பெற்றார்.
இதையடுத்து ராஜூ என்ற நாய் அவருக்கு உணர்ச்சிபூர்வமாக பிரியாவிடை கொடுத்தது. தனக்கும் ராஜூவுக்கும் இடையிலான பிணைப்பு, பல வருட விசுவாசம் மற்றும் தோழமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என தீயணைப்பு வீரர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.