Friday, May 23, 2025

எங்ககிட்டயே பஞ்சாயத்தா? சிம்ரனிடம் மன்னிப்பு கேட்ட ‘நடிகை’

49 வயதானாலும்கூட ரசிகர்கள் மனதில் இன்றும் நடிகை சிம்ரனுக்கு என்று தனியிடம் உள்ளது. 1996ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் வழியாக கோலிவுட்டில் அறிமுகமான சிம்ரன் 29 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கிறார்.

அண்மையில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில், சிறிய கேமியோ வேடத்தில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். தொடர்ந்து சசிகுமாருடன் நடித்து வெளியான டூரிஸ்ட் பேமிலி பாக்ஸ் ஆபிஸில் பயங்கர ஹிட்டடித்து, சிம்ரனுக்கு நல்லதொரு Comeback கொடுத்துள்ளது.

சமீபத்திய விழாவொன்றில் தான் சொன்ன ஒரு கருத்துக்கு, சக நடிகை மோசமான முறையில் பதில் அளித்தார். தன்னை அது மிகவும் பாதித்தது என்று வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” யாருப்பா அது எங்க தலைவி கிட்ட வம்பிழுத்தது? என்று, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அர்ச்சித்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த நடிகை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக, சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சிம்ரன், ” அந்த நடிகை பேசியது எனக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அன்று மிகவும் வருத்தத்துடன் என்னுடைய ஆழ்மனதில் இருந்து பேசினேன்.

அந்த நடிகை அவரது கருத்தைச் சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. அதை வெளிப்படுத்த தேர்வு செய்த வார்த்தைகள் தான் என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின்னர், சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து மன்னிப்பு கேட்டு Message வந்தது.

அதில், என்னைக் காயப்படுத்த வேண்டும் என அவர் அப்படி கூறவில்லை என்று விளக்கமளித்து இருந்தார்,” இவ்வாறு சிம்ரன் தெரிவித்து இருக்கிறார். என்னதான் காயப்படுத்தி இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை சிம்ரன் இதுவரை, பொதுவெளியில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news