IPL பரபரப்புகளுக்கு மத்தியிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கு ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பும் முக்கிய காரணமாகும்.
ரோஹித்தின் ஓபனிங் இடத்திற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் என ஏராளமான இளம்வீரர்கள் இருக்கின்றனர் . ஆனால் விராட்டின் 4வது இடத்திற்கு, பொருத்தமான ஒரு வீரரைத் தேர்வு செய்வது, BCCIக்கு மிகப்பெரும் Task ஆக மாறியுள்ளது.
இந்தநிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை, கருண் நாயருக்கு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் என பலருமே கருணுக்கு வெகுவாக சப்போர்ட் செய்து வருகின்றனர்.
அண்மையில் முன்னாள் வீரர் Sanjay Bangar இதுகுறித்து, ” கில், கேஎல் ராகுலைக் காட்டிலும் கருண் நாயர் தான் விராட் கோலியின் இடத்திற்கு பொருத்தமானவர்,” என்று உரக்கப் பேசியிருக்கிறார். விஜய் ஹசாரே டிராபியில் கருண் நாயரின் அணி பைனலுக்கு முன்னேறியது.
ரஞ்சி தொடரில் விதர்பா அணி கோப்பை வெல்லவும் கருணே முக்கிய காரணம். IPL தொடரிலும் டெல்லி அணிக்காக அடித்து ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் கருண் தான்.
எனவே அவருக்கு King கோலியின் இடத்தை BCCI அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இங்கிலாந்திற்கு எதிரான இந்திய A அணியில் கருணும் இடம் பெற்றுள்ளார். பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால், 9 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில், கருண் நாயர் இந்தியாவிற்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.