நடப்பு IPL தொடரில் பலத்த அடிவாங்கியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஒருசில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக சென்னை அணியின் முக்கிய வீரரும், ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜாவை Trading மூலம், வேறு அணிக்கு அனுப்பிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் அடிபட்டு வருகின்றன.
இதை முன்னாள் இந்திய வீரரும், IPL வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர், ” சென்னை அணியில் ஓபனிங் இடங்களுக்கு ஆயுஷ் மாத்ரே, கான்வே உள்ளனர்.
3வது, 4வது இடங்களில் உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ் ஆடுவர். இதனால் ஜடேஜாவை 4வது இடத்தில் ஆடவைக்க முடியாது. அதோடு ஜடேஜாவுக்கு தற்போது 36 வயதாகிறது. இதனால் அவரை Trading செய்ய CSK முடிவெடுக்கலாம்.
சென்னை அணிக்கு தற்போது ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும், நல்ல பினிஷரும் தான் தேவை,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி 12 ஆண்டுகளாக சென்னை அணிக்காக ஜடேஜா ஆடிவருகிறார்.
இதனால் தான் மெகா ஏலத்திற்கு முன்பாக ஜடேஜாவை ரூபாய் 18 கோடிக்கு CSK தக்க வைத்தது. ஆனால் நடப்பு சீசனில் அவர் பெரிதாக பெர்பார்ம் செய்யவில்லை. அதோடு இளைஞர்கள் பக்கம் சென்னை அணியின் கவனம் திரும்பி இருப்பதும், இந்த Trading முடிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.