Thursday, May 22, 2025

தோட்டத்திற்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு நாய்கள் கூட்டமாக இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.

இதில் ஒரு நாய் மீது குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதை பார்த்த நாயின் உரிமையாளர் ராதிகா தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து ராதிகா தட்டிக்கேட்டதற்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்ரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news