Wednesday, May 21, 2025

கோலிவுட்டின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ விஷாலுக்கு இப்படி ஒரு காதலா? தன்ஷிகா இத்தனை வயது இளையவரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்…பொதுவாக சினிமா துறையில் ஒரு சில நடிகர்கள் பற்றி அடிக்கடி சர்ச்சை செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும், அந்த வரிசையில் நடிகர் விஷாலும் ஒருவர்…அந்த வகையில் கோலிவுட்டின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ விஷால் சந்தித்த காதல் சர்ச்சையில் வரலட்சுமி,லட்சுமி மேனன்,கீர்த்தி சுரேஷ், அனிஷா ரெட்டி,அபிநயா என பல பிரபலங்களுடன் சர்ச்சையில் சிக்கி சர்ச்சைக்கு பெயர் போனவராக இருந்தார்.. அதன் பின்னர் நடிகர் விஷாலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட ப்ரமோஷனில் கலந்து கொண்டபோது கை கால் நடுக்கம் இருந்ததை பார்த்து பலர் விஷாலுக்கு நோய் இருப்பதாக வதந்திகளை பரப்பினர்…இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூத்தாண்டவர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் விஷாலுக்கு திடீர் உடல்நிலை குறை ஏற்பாடால் மயக்கம் வந்தது. அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு ஒரு பேட்டியில் விஷால் கலந்து கொண்டார்.. அப்போதுதான் தனக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடனே என்னுடைய திருமணம் நடக்கும் என்று சொல்லி இருந்தார். இதை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லியிருந்தாலும், இப்போது நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவிற்கு அடுத்த நாள் என்னுடைய திருமணம் நடக்கப்போகிறது என்று கூறி இருக்கிறார்.

இதனால் யார் அவர் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியாகி பரவி வருகிறது.
அதாவது விஷாலுக்கு நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது.

தன்ஷிகா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் பேராண்மை, பரதேசி,காலா என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தன்ஷிகா தன்னுடைய தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஷால் மற்றும் தன்ஷிகா இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருந்தாலும் இது உண்மையா? அல்லது இதுவும் சர்ச்சையா? என்பதும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் விஷால் மற்றும் தன்ஷிகா தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க திறப்பு விழா நடைபெற உள்ளது. அது முடிந்த கையோடு விஷால் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. ஆனால் நடிகை சாய் தன்ஷிகா அவரை விட 12 வயது இளையவராம். தற்போது சாய் தன்ஷிகாவுக்கு 35 வயது ஆகிறது. எங்கு பார்த்தாலும் இந்த செய்தி தான் பரவிவருகிறது.. அது மட்டுமின்றி ரசிகர்களும் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை விஷால் மற்றும் தன்ஷிகா ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்..

Latest news