இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி விளையாடுகிறது. 2027ம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா விளையாட வேண்டுமெனில் இனிவரும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரும் முக்கியமானதாகும்.
குறிப்பாக ரோஹித், விராட் இல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கிடையே அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா A அணியில், இளம்வீரர்கள் பலருக்கும் இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக ட்ரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியில் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்ட, 27 வயது இளம்வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் BCCI வாய்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் IPL ஏலத்தில் அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட சர்பராஸ்க்கு, மீண்டும் வாய்ப்பு கிடைத்தது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இளம்வயது தான் என்றாலும் உடல் எடையை சர்பராஸ் கட்டுக்குள் வைக்கவில்லை. ஆனால் BCCIயோ நீங்கள் எடையைக் குறைத்தால் தான் உங்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து, யோசிக்க முடியும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறி விட்டதாம்.
இதையடுத்து கடந்த ஒரு மாதமாக கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து சுமார் 10 கிலோ வரை சர்பராஸ் எடையைக் குறைத்துள்ளார். தொடர்ந்து BCCIயிடம் தன்னுடைய Fitnessயும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு பிறகே அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சர்பராஸ் கானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள், ” பார்க்க நன்றாக இருக்கிறீர்கள். அணியில் கிடைத்த வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்,” என்று அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.