Tuesday, January 27, 2026

என்னது ரெட்ரோ வசூல் ரூ.234 கோடியா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை.

இந்நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. எனினும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுவரை திரையரங்க வசூல் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நிலையில், புதிதாக திரையரங்கு அல்லாத வருவாயையும் சேர்த்து ஒட்டுமொத்த வசூலாக காட்டுவது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Related News

Latest News