இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட, IPL போட்டிகள் மீண்டும் மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. Play Off ரேஸில் இருந்து சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் விலகி விட்டன.
பாயிண்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத், பெங்களூரு அணிகள் மட்டுமே இதுவரை Play Off வாய்ப்பினை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு பஞ்சாப், டெல்லி, லக்னோ, மும்பை என 4 அணிகள் போட்டி போடுகின்றன.
இந்தநிலையில் BCCI வெளியிட்ட அறிவிப்பால் டெல்லி, லக்னோ அணிகளின் Play Off கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான A அணியில் டெல்லி அணியின் கருண் நாயர், முகேஷ் சர்மா மற்றும் லக்னோ அணியின் ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளனர்.
மே 20ம் தேதி இந்திய A அணி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் மேற்கண்ட வீரர்கள் IPL தொடரில் ஆட முடியாது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வெளியேறியதால் அணிகள் ஒவ்வொன்றும் தலையை பிய்த்துக்கொண்டு திரிகின்றன.
தற்போது இந்திய வீரர்களும் டெஸ்ட் தொடருக்காக விலகுவதால் டெல்லி, லக்னோ அணிகளின் Play Off கனவு தகர்ந்து போயுள்ளது. குறிப்பாக டெல்லியை காட்டிலும் லக்னோவிற்கு தான் சேதாரம் அதிகம். ‘பட்ட காலிலேயே படுவது போல’ காயத்தால் ஏற்கனவே மயங்க் யாதவ் விலகிய நிலையில், தற்போது ஷர்துல் தாகூரையும் லக்னோ இழந்து நிற்கிறது.