Tuesday, July 1, 2025

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவி கீர்த்திவாசனி (15). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி தான் சரியாக தேர்வு எழுதவில்லை என்று மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தோல்வி பயத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் கீர்த்திவாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

கீர்த்திவாசனி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news