கள்ளக்குறிச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவினர் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு அண்ணா நகர் பகுதியில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.