சென்னையில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
திருச்சி, தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னறிவிப்பு இல்லாமல் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.