Friday, May 16, 2025

குற்றவாளிகளுக்கு மட்டும் மாவுக்கட்டா? – நீதிமன்றம் கேள்வி

காவல் நிலையத்தில் குற்றவாளிகளுக்கு மாவு கட்டு போடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாவுக்கட்டு போடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவல் நிலைய கழிப்பறைகளில் எப்போதும் குற்றம்சாட்டப்படுபவர்கள் மட்டுமே வழுக்கி விழுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளது.

கழிவறையை பயன்படுத்தும் காவல் ஆய்வாளர்களுக்கு யாரும் வழுக்கி விழுவதில்லையே. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலைய கழிவறைகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest news