Friday, May 16, 2025

2024ல் ‘CSK’ இப்போ DCயா? தகர்ந்துபோன ‘Play Off’ கனவு

இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின், Play Off கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் Mustafizur Rahman முக்கிய காரணமாகி இருக்கிறார். வங்கதேச வீரரான Mustafizur ஐ சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து, கடந்தாண்டு அணியில் இணைத்தது.

இந்தியா-வங்கதேசம் இடையிலான போட்டியின்போது, அப்போதைய இந்திய அணியின் கேப்டன் Dhoniக்கும் – Mustafizurக்கும் மைதானத்திலேயே முட்டிக் கொண்டது. என்றாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல், தோனி சென்னை அணியில் Mustafizurக்கு வாய்ப்பளித்தார்.

ஆனால் Play Offஐ உறுதி செய்யும் கடைசிக்கட்ட போட்டிகளின்போது, வங்கதேசத்திற்கு Mustafizur பறந்து விட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் போர்டே முக்கிய காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியமான BCBயும், Mustafizurம் மீண்டும் ஒருமுறை அரங்கேற்றி உள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்கு பதிலாக, வங்கதேச வீரர்  Mustafizur Rahmanஐ ரூபாய் 6 கோடிக்கு எடுத்துள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி அறிவித்தது. ஆனால் Mustafizur, ” கிரிக்கெட் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறேன்,’; என்று ட்வீட் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் CEO நிஜாமுதீன் சவுத்ரி, ” இதுவரை BCCI தரப்போ, Mustafizur Rahmanனோ NOC கேட்டு எங்களை அணுகவில்லை. எங்களின் அட்டவணைப்படி அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிரிக்கெட் விளையாட சென்று விட்டார்,” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து NOC பெறாமல், டெல்லி எப்படி Mustafizurஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது? இந்த விஷயத்தில் உண்மையில் விளையாடுவது BCCIயா? இல்லை BCBயா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” IPL தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு, BCCI அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது தான் இதற்கெல்லாம் காரணம். இனிமேல் மாற்று வீரர்களாக இந்திய வீரர்களையே அணிகள் ஒப்பந்தம் செய்ய வேண்டும்,” என்று சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

Latest news