திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, திருச்சி டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சீமான் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினார்.
கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.