பாகிஸ்தானை உலுக்கியெடுக்கும் நிலநடுக்கங்கள்… அதுவும் ஒருசில நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை… “ஏதோ சரி இல்லையே…” என்று உங்களுக்கு தோன்றுவதை போலவே பலருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்களையும் குழப்பங்களையும் இது ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அங்கே நடக்கும் நிலநடுக்கங்கள் உண்மையில் நிலநடுக்கங்கள் தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த திங்கள் அன்று பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதோடு மட்டுமல்லாமல் முன்னதாக கடந்த சனிக்கிழமை தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்கள் அந்நாட்டை அசைத்தது. காலையில் 4.7 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலும் உண்டான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது.
புவியியலாளர்கள் மற்றும் வானிலை வல்லுநர்கள் நில அதிர்வு இமயமலைப் பகுதியில் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர். இங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான நிகழ்வுதான் என்றாலும் இந்த நேரத்தில் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மற்றொருபுறம் கிரானா மலைகளில் உள்ள பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு வசதியின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அங்கே இருந்த சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டது. அந்நாளிலேயே அங்கே 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த அணு ஆயுத வசதி ஏதாவது தகர்க்கப்பட்டு அதனால் அணு கசிவு ஏற்பட்டு அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி பேசுகையில், அணு ஆயுத சோதனைகளை வைத்து இந்தியாவை இனி மிரட்ட முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.