Thursday, January 15, 2026

விராட், ரோஹித் 50 வயது வரை விளையாட வேண்டும் – யோக்ராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதற்கு முன்பு ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதாவது : விராட், ரோஹித் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் இருப்பதாக உணர்கிறேன். சிறந்த வீரர்கள் 50 வயது வரை விளையாட வேண்டும். இளம் வீரர்களை ஊக்கப்படுத்த யாரும் இல்லாதது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

Related News

Latest News