Thursday, May 15, 2025

ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்

கோவையை சேர்ந்த ஜான் ஜெபராஜ் கடந்த ஏப்ரல் மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜான் ஜெபராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Latest news