கனடாவில் 2025 கூட்டாட்சித் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. இதன் மூலம், கட்சித் தலைவர் மார்க் கார்னி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் தனது அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தை நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக பதவியேற்றார்.
இதற்கு முன், 2019 முதல் 2025 வரை ஓக்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர், தேசிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் மற்றும் கருவூல வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய இலாகாக்களை அவர் வகித்துள்ளார்.