Thursday, May 15, 2025

”எதிரிக்கு எதிரி நண்பன்” முதுகில் குத்திய ‘ரெண்டு’ நாடுகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தில், இரண்டு நட்பு நாடுகளின் துரோகம் வெளிப்பட்டு இருக்கிறது. நாட்டாமைகளாக கருதப்படும் சீனா, அமெரிக்கா நாடுகளே அமைதியாக இருந்த நிலையில் சின்னஞ்சிறு நாடுகளான துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்றன.

துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக டிரோன்களை வழங்கி தன்னுடைய, விசுவாசத்தை வெளிப்படுத்தியது. அஜர்பைஜான் இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்தியாவின் ‘சிந்தூர் தாக்குதல்’ குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த இருநாட்டு பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மேற்கண்ட நாடுகளுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லக்கூடாது என, இணையத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மேலும் துருக்கி ஆப்பிள்களை இனிமேல் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும், இந்திய வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2023 இல் துருக்கி பூகம்பத்தால் பெரும் சேதத்தை சந்தித்தபோது, அந்நாட்டிற்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் தோஸ்த்’ தொடங்கியது குறிப்பிடத்தக்கது. என்றாலும் இந்தியாவால் கிடைத்த நன்மைகளை கருத்தில் கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராக இரண்டு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.

இதனால் இந்தியாவுடனான இரு நாடுகளின் உறவுகளும், இனிவரும் காலங்களில் சுமூகமாக இருக்காது என்று தெரிகிறது. இதற்கிடையே அஜர்பைஜான், துருக்கி நாடுகளுக்கான பயணங்களை ரத்து செய்து, இந்தியர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news