கடந்த மாதம் 23 ஆம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்றுள்ளார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் விடுத்துள்ளது.