கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடி வீட்டின் மீது பாகிஸ்தான் ஏன் குண்டு வீசவில்லை? இந்தியாவில் அமைதி நிலவியபோது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியது அவர்தான். அவர் வீட்டின் மீது பாகிஸ்தான் குண்டு வீசவேண்டும் என வெளியிட்டுருந்தார்.
இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அந்த நபரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் நவாஜ்(வயது 27) என்பது தெரியவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் விரக்தியடைந்து இந்த வீடியோவை பதிவிட்டது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.