உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார்.
52ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற இவர் 6 மாதங்கள் பதவியில் இருப்பார்.