பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி(33) உடுப்பியில் திருமண விழாவில் பங்கேற்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி உடுப்பியில் நேற்று நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்து கீழே சரிந்து விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ராகேஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவு கன்னட திரையுலக மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.