2025 கன IPL தொடரில் RCB அணி சிறப்பாக விளையாடி வந்தது. தற்போது புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவியதால், தற்காலிகமாக IPL நிறுத்தப்பட்டது. இதனையடுத்து RCB அணிக்கு மற்றொரு பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது RCB அணியில் இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் [ Josh Hazlewood ] ,IPL தொடரில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறார். அதாவது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பதால் இந்த எடுத்துள்ளாராம்..
ஜூன் 11 அன்று துவங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்பதால், அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது IPL இல் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார்.
தற்போது இந்த ஆண்டு IPL தொடரில் ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மிகவும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். அவர் இல்லாத நிலையில் RCB அணி நிச்சயம் பந்துவீச்சில் பின்னடைவை சந்திக்கும் என்கின்றனர்.
இந்த ஆண்டு RCB அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அந்த அணி இந்த ஆண்டு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதாகப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், தற்போது முதல் அடியாக ஜோஷ் ஹேசில்வுட் விலகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இன்னும் RCB அணியில் என்னென்ன பின்னடைவுகள் ஏற்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது IPL தொடர் மே 16 அல்லது 17 அன்று துவங்கும் எனக் கூறப்படுகிறது. IPL இறுதிப் போட்டி மே 30 அன்று நடைபெறும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிகளைத் துவக்கியிருப்பதால் ஆஸ்திரேலியா வீரர்கள் பலர் IPL தொடரிலிருந்து விலகுவார்கள் எனவும் கூறப்படுகிறது.