Saturday, May 10, 2025

‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விமல் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்குராஜா’. காமெடி கலந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news